உலக செய்திகள்

பிரேசில் அதிபரின் வீடியோவை நீக்கிய யூடியூப் நிறுவனம் + "||" + YouTube removes videos from Brazilian President Jair Bolsonaro's channel for COVID-19 misinformation

பிரேசில் அதிபரின் வீடியோவை நீக்கிய யூடியூப் நிறுவனம்

பிரேசில் அதிபரின் வீடியோவை நீக்கிய யூடியூப் நிறுவனம்
தவறான தகவலைத் தெரிவித்ததாக பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவின் வீடியோவை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது.
பிரேசிலியா.

கொரோனா தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து அதுகுறித்து பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உலா ஆரம்பித்தன. அதிகாரப்பூர்வமற்ற அறிவியலுக்கு புறம்பான தகவல்கள் பரவுவதைத் தடுக்க சமூக வலைத்தள நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

அதன்படி கொரோனா தொடர்பாக பல்வேறு நாடுகளின் முக்கியப் பிரமுகர்களும் கூட ஆதாரமற்ற தகவல்களை பகிரும் நிலையில் தவறான தகவல்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தானது கொரோனா பாதிப்பை தடுக்கவல்லது என பிரேசில் அதிபர் பேசிய வீடியோவை யூடியூப் தளத்தின் விதிகளுக்கு எதிராக அவரின் வீடியோ இருப்பதாகக் கூறி அந்நிறுவனம் நீக்கியுள்ளது. மேலும் அவரது வீடியோவில் முகக்கவசங்களால் கொரோனாவைத் தடுக்க முடியாது.

முன்னதாக கொரோனாவை கையாண்டது தொடர்பாக பிரேசில் அதிபருக்கு எதிராக புகார்கள் குவிந்து வரும் நிலையில் அவர்மீது அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.