ஜனநாயக ஆதரவாளர்களை தாக்கிய 7 பேருக்கு சிறைத்தண்டனை; ஹாங்காங் கோர்ட்டு தீர்ப்பு


ஜனநாயக ஆதரவாளர்களை தாக்கிய 7 பேருக்கு சிறைத்தண்டனை; ஹாங்காங் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 22 July 2021 9:31 PM GMT (Updated: 22 July 2021 9:31 PM GMT)

ஹாங்காங்கில் யுயென் லாங்க் ரெயில் நிலையத்தில் 2019-ம் ஆண்டு ஜனநாயக சார்பு ஆதரவாளர்கள் மற்றும் பயணிகள் தடிகளாலும், இரும்பு கம்பிகளாலும் சரமாரியாக தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஹாங்காங் மாவட்ட கோர்ட்டு, அவர்கள் குற்றவாளிகள் என கண்டு, அவர்களுக்கு 3½ ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த கோர்ட்டில் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை தான் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது கண்மூடித்தனமான தாக்குதல், இது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Next Story