பெகாசஸ் சர்ச்சை; செல்போனை மாற்றினார் பிரான்சு அதிபர்


பெகாசஸ் சர்ச்சை; செல்போனை மாற்றினார் பிரான்சு அதிபர்
x
தினத்தந்தி 23 July 2021 3:14 AM GMT (Updated: 23 July 2021 3:14 AM GMT)

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உலக அளவில் முக்கிய பிரமுகர்களின் செல்போன் வேவு பார்க்கப்பட்டு இருக்கலாம் என அண்மையில் செய்தி வெளியானது.


பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பெகாசஸ் மென்பொருள் மூலம் வேவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்று இமானுவேல் மேக்ரான் தரப்பினர் தெரிவித்தனர். 

இந்த நிலையில், இமானுவேல் மேக்ரான்  தனது செல்போன் எண் மற்றும் செல்போனை மாற்றியுள்ளார். இமானுவேல் மேக்ரான் செல்போனை மாற்றியதால் அவரது போன் உளவு பார்க்கப்பட்டதாக அர்த்தமில்லை. கூடுதல் பாதுகாப்புக்காக மட்டுமே செல்போன் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இம்மானுவேல் மேக்ரானை தவிர, இராக் அதிபர் பர்ஹம் சாலி, தென்னாப்பிரிக்கஅதிபர் சைரில் ராமோஃபோசா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பெளலி, மொராக்கோ பிரதமர் சாத் எட்டின் எல் அத்மானி ஆகியோரின் எண்கள் வேவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்தாக வெளியான செய்தி சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story