பிரேசிலின் 2 நிறுவனங்களுடனான ஒப்பந்தம் ரத்து: பாரத் பயோடெக் அறிவிப்பு


பிரேசிலின் 2 நிறுவனங்களுடனான ஒப்பந்தம் ரத்து:  பாரத் பயோடெக் அறிவிப்பு
x
தினத்தந்தி 24 July 2021 2:58 AM GMT (Updated: 24 July 2021 2:58 AM GMT)

முதற்கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் பிரேசில் நாட்டின் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் நிறுவனம் மூலம் அந்நாட்டுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஐதராபாத்,

இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பூசியின் 2 கோடி டோஸ்களை வாங்குவதற்காக பிரேசில் அரசு கடந்த பிப்ரவரி மாதம்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.    முதற்கட்டமாக 4 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் பிரேசில் நாட்டின் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் நிறுவனம் மூலம் அந்நாட்டுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால், பைசர் தடுப்பு மருந்துடன் ஒப்பிடுகையில் பாரத் பயோடெக்கின் கோவேக்சின் விலை அதிகமாக இருப்பதாகவும் லட்சக்கணக்கானோர் பிரேசிலில் கொரோனாவுக்கு  உயிரிழந்த நிலையில் தடுப்பூசி விவகாரத்தில் அதிபர் ஊழல் செய்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின.

 எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் கோவேக்சின் தடுப்பூசி ஒப்பந்தம் பெரும் சர்ச்சையைான நிலையில், பிரேசிலுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

அதேசமயம் பிரேசில் நாட்டுக்கு நேரடியாக கோவேக்சின் தடுப்பூசியை விநியோகம் செய்ய தயாராக இருப்பதாகவும், பிரேசில் அரசுடன் இணைந்து செயல்பட தடை ஏதுமில்லை எனவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story