கோவேக்சின் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி ரத்து: பிரேசில்


கோவேக்சின் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி ரத்து: பிரேசில்
x
தினத்தந்தி 24 July 2021 7:36 AM GMT (Updated: 24 July 2021 7:39 AM GMT)

கோவேக்சின் தடுப்பூசி ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக பெரும் சர்ச்சையைான நிலையில், பிரேசிலுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்தது.

பிரசிலியா, 
 
பாரத் பயோடெக் நிறுவனம், பிரேசிலில் உள்ள தனது கூட்டுநிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததையடுத்து, பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் நடத்தப்பட இருந்த மருத்துவ பரிசோதனையை பிரசேில் அரசு ரத்து செய்துள்ளது.  

முன்னதாக, கோவேக்சின் தடுப்பூசி ஒப்பந்தத்தில்  ஊழல் நடைபெற்றதாக பெரும் சர்ச்சையைான நிலையில், பிரேசிலுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்தது. 

 எனினும், பிரேசில் நாட்டுக்கு நேரடியாக கோவேக்சின் தடுப்பூசியை விநியோகம் செய்ய தயாராக இருப்பதாகவும், பிரேசில் அரசுடன் இணைந்து செயல்பட தடை ஏதுமில்லை எனவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், கோவேக்சின் மருத்துவ பரிசோதனைக்கான அனுமதியை பிரேசில் ரத்து செய்துள்ளது. 


Next Story