ஆப்கானிஸ்தானில் வான் வழித் தாக்குதலில் 30 தலிபான்கள் பலி; 17 பேர் காயம்


ஆப்கானிஸ்தானில் வான் வழித் தாக்குதலில் 30 தலிபான்கள் பலி; 17 பேர் காயம்
x
தினத்தந்தி 24 July 2021 10:00 AM GMT (Updated: 2021-07-24T15:30:27+05:30)

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 30 தலிபான்கள் உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் ராணுவம் இரண்டு பகுதிகளில் மேற்கொண்ட வான் வழித் தாக்குதலில் 30 தலிபான்கள் உயிரிழந்ததாகவும் 17 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை மந்திரி  உறுதிசெய்துள்ளார்.

வடக்கு ஜாவ்சான் பகுதியைச் சேர்ந்த முர்காப் மற்றும் ஹாசன் தப்பின் கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை சுற்றிவளைத்த ராணுவம் வான் வழித் தாக்குலைத் தொடர்ந்தது. இதில் 19 தீவிரவாதிகள் பலியானார்கள். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதில் தலிபான்கள் பயன்படுத்திய ஆறு இருசக்கர வாகனங்கள் , இரண்டு பதுங்கு குழிகள் , பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் ராணுவத்தினர் கண்டுபிடித்து அழித்தனர். 

ஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த வான்வழித் தாக்குதல்கள் ஓரு வார காலமாக நீட்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story