உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு; துனிசியாவில் ஒரே நாளில் 317 பேர் உயிரிழப்பு + "||" + Corona damage; 317 killed in one day in Tunisia

கொரோனா பாதிப்பு; துனிசியாவில் ஒரே நாளில் 317 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு; துனிசியாவில் ஒரே நாளில் 317 பேர் உயிரிழப்பு
கொரோனா பாதிப்புகளால் துனிசியாவில் ஒரே நாளில் 317 பேர் உயிரிழந்து உள்ளனர்.


துனிஸ்,

வட ஆப்ரிக்க நாடான துனிசியாவில் ஒரே நாளில் 5,624 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இதனால் மொத்த பாதிப்பு 5,63,930 ஆக உயர்வடைந்து உள்ளது.  எனினும், குணமடைந்தோர் எண்ணிக்கை 4,57,597 ஆக உள்ளது.

அந்நாட்டில் ஒரே நாளில் 317 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 18,369 ஆக உயர்வடைந்து உள்ளது.

இதுவரை துனிசியாவில் மொத்தம் 21 லட்சத்து 54 ஆயிரத்து 63 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.  துனிசியாவுக்கு 10 லட்சத்திற்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் சென்று சேரவுள்ளன.

வருகிற வாரங்களில் 50 லட்சம் துனிசியர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என அந்நாட்டு அதிபர் கயிஸ் சயீத், அவசரகால கூட்ட ஆலோசனை மேற்கொண்ட பின்பு கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; 956 பேருக்கு சிகிச்சை
புதுச்சேரியில் புதிதாக 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா பாதிப்பு: காஷ்மீரில் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சில பகுதிகளில் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
3. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. கொரோனா பாதிப்பு குறைந்ததால் அனைத்து எல்லைகளையும் திறந்த நேபாளம்!
நேபாள நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் அனைத்து எல்லைகளையும் அந்நாடு திறந்துள்ளது.
5. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
தமிழகத்தில் நேற்று 1,647- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.