துனிசியாவில் வன்முறை: பிரதமர் பதவி நீக்கம் நாடாளுமன்றம் 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு


Image courtesy : Reuters
x
Image courtesy : Reuters
தினத்தந்தி 26 July 2021 9:55 AM GMT (Updated: 26 July 2021 9:55 AM GMT)

துனிசியா முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமர் மற்றும் ஆளும் கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

துனிஸ்

துனிசியாவில் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் வன்முறை போராட்டங்களுக்கு பின்னர் பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சியை பதவி நீக்கம் செய்து  ஜனாதிபதி கைஸ் சையத் உத்தரவிட்டு  உள்ளார். நாடாளுமன்றத்தை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார்.

துனிசியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனால்  நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்து உள்ளது.  இதனால் பலர் வேலை இழந்துள்ளனர். இதனால் அங்கு மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது.

நேற்று அங்கு மிகப்பெரிய வன்முறை வெடித்தது. துனிசியா முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமர் மற்றும் ஆளும் கட்சிக்கு  எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதை தொடர்ந்து துனிசியா ஜனாதிபதி கைஸ் சையத் பிரதமரை பதவி நீக்கம் செய்து  ஜனாதிபதி கைஸ் சையத் உத்தரவிட்டு  உள்ளார். நாடாளுமன்றத்தை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார்.

ஏற்பகனவே பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சிக்கும் ஜனாதிபதி கைஸ் சையதுக்கும் நீண்டகால மோதல் இருந்து வந்தது.


Next Story