உலக செய்திகள்

ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா அதிகரிப்பு - புதிதாக 16 பேருக்கு தொற்று உறுதி + "||" + Three athletes among 16 new Covid-19 cases at Tokyo Olympics

ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா அதிகரிப்பு - புதிதாக 16 பேருக்கு தொற்று உறுதி

ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா அதிகரிப்பு - புதிதாக 16 பேருக்கு தொற்று உறுதி
டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
டோக்கியோ,

கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் தள்ளிவைக்கப்பட்ட போட்டிகள் இந்த வருடம் நடந்து வருகிறது. கொரோனா பரவலுக்கு இடையே மிகுந்த பாதுகாப்போடு ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.

பாதுகாப்பு கருதி இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வீரர்கள், பயிற்சியாளர்கள், கமிட்டியினர், வீரர்களின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் மட்டுமே இந்த முறை ஒலிம்பிக் கிராமத்திற்குள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இத்தனை பாதுகாப்புகளுக்கு இடையில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தாலும் கூட தொடர்ந்து பல்வேறு வீரர், வீராங்கனைகள் கொரோனா காரணமாக ஒலிம்பிக் மைதானத்தில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில்,  டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்புடைய 16 பேருக்கு அங்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148-ஆக அதிகரித்து உள்ளது. இதனிடையே, பயிற்சியாளர் மற்றும் வீரருக்கு கொரோனா உறுதியானதால் நெதர்லாந்து துடுப்புப் படகு அணி, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளது.