உலக செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தலில் இம்ரான்கான் கட்சி வெற்றி + "||" + Imran Khan's Ruling Party Wins PoK Regional Election

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தலில் இம்ரான்கான் கட்சி வெற்றி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தலில் இம்ரான்கான் கட்சி வெற்றி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களை கொண்ட சட்டசபைக்கு முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 53 இடங்களில் 8 இடங்கள் நியமன உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், மீதமுள்ள 45 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
கடுமையான வன்முறைகள் மற்றும் மோசடி புகார்களுக்கு மத்தியில் இந்த தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலின் போது நடந்த வன்முறையில் 2 பேர் பலியாகினர். போலீசார் உள்பட பலர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதனை தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 23 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்த கட்சி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 10 இடங்களை கைப்பற்றி 2-வது இடத்தை பிடித்தது. அதேசமயம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான்: நபிகள் குறித்து அவதூறு பரப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை
பாகிஸ்தானில் தனது தோழிக்கு நபிகள் பற்றிய அவதூறான கேலிச்சித்திரங்களை அனுப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2. இம்ரான்கான் கட்சியின் நிதி மோசடி: தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு
தேர்தல் கமிஷன், மனுதாரருக்கு ஆவணங்களை வெளியிட உத்தரவிட்டு இருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நிலையில் என்ன கோளாறு? ஆராய மருத்துவ நிபுணர்கள் குழு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நிலையில் என்ன கோளாறு என்று ஆராய 9 மருத்துவ நிபுணர்களை கொண்ட குழுவை பஞ்சாப் மாகாண அரசு அமைத்துள்ளது.
4. இந்திய கடல் எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் படகு; மடக்கிப் பிடித்தது கடலோர காவல் படை
இந்திய கடல் எல்லைக்குள் 10 பேருடன் வந்த பாகிஸ்தான் படகு அத்துமீறி நுழந்தது.
5. ‘எல்லையில் வேலி போட பாகிஸ்தானை அனுமதிக்க முடியாது’- தலீபான்கள்
எல்லையில் வேலி போட பாகிஸ்தானை அனுமதிக்க முடியாது என்று தலீபான் படை தளபதி கூறியுள்ளார்.