தலீபான்களின் தாக்குதலுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் 46 பேர் பாகிஸ்தானில் தஞ்சம்


தலீபான்களின் தாக்குதலுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் 46 பேர் பாகிஸ்தானில் தஞ்சம்
x
தினத்தந்தி 27 July 2021 1:14 AM GMT (Updated: 27 July 2021 1:14 AM GMT)

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அந்த நாட்டு ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் தற்போது அங்கிருந்து வெளியேறி விட்டன. இதன் காரணமாக அங்கு தலீபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அண்டை நாடுகளுடனான எல்லை பகுதிகளை கைப்பற்றுவதில் அவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு நிலைமை மோசமாகி வருகிறது.இந்த நிலையில் தலீபான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த 46 ராணுவ வீரர்கள் தங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

5 ராணுவ அதிகாரிகள் உள்பட 46 வீரர்கள் எல்லையை கடந்து தங்கள் நாட்டுக்குள் வந்து அடைக்கலம் கோரியாதாகவும், ராணுவ விதிமுறைகளின்படி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் 
வழங்கியதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Next Story