அயர்லாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் - நாடாளுமன்றம் ஒப்புதல்


அயர்லாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் - நாடாளுமன்றம் ஒப்புதல்
x
தினத்தந்தி 27 July 2021 5:25 PM GMT (Updated: 27 July 2021 5:25 PM GMT)

அயர்லாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

டுப்ளின்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் இதுவரை 84 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 70 சதவீதம் பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அயர்லாந்தில் 12 முதல் 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்திற்கு அயர்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் முதல் அங்கு 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை அங்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் 16, 17 வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய மருத்துவ கழகம் இதுவரை பைசர்/பயோ என்டெக் மற்றும் மாடர்னா ஆகிய இரண்டு தடுப்பூசிகளை மட்டுமே சிறுவர்களுக்கு செலுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் ஏற்கனவே பிரான்ஸ், கிரீஸ், டென்மார்க் ஆகிய நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story