உலக செய்திகள்

சீன துறைமுகங்களில் இந்திய மாலுமிகளுக்கு தடையா? - சீனா பதில் + "||" + Is there a ban on Indian sailors in Chinese ports? - China Answer

சீன துறைமுகங்களில் இந்திய மாலுமிகளுக்கு தடையா? - சீனா பதில்

சீன துறைமுகங்களில் இந்திய மாலுமிகளுக்கு தடையா? - சீனா பதில்
சீன துறைமுகங்களில் இந்திய மாலுமிகளுக்கு தடையா என்பது குறித்து சீனா பதில் அளித்துள்ளது.
பீஜிங்,

சீனாவுக்கு வரும் வர்த்தக கப்பல்களில் இந்திய மாலுமிகள் இருக்கக்கூடாது என சீன அரசு அதிகாரபூர்வமற்ற தடையை விதித்துள்ளதாக அகில இந்திய மாலுமிகள் மற்றும் பொது பணியாளர் சங்கம் அண்மையில் தெரிவித்தது.

இந்திய மாலுமிகளுடன் வரும் கப்பல்களை தங்கள் துறைமுகங்களில் நிறுத்துவதற்கு சீனா தடை விதித்துள்ளதாகவும், இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்தது. இந்த நிலையில் சீன துறைமுகங்களில் இந்திய மாலுமிகளுக்கு தடை விதித்ததாக கூறப்படுவதை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறுகையில் " சீனா ஒருபோதும் அத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க வில்லை. இது பற்றி வெளியான தகவல்கள் தவறானவை" என கூறினார்.