உலக செய்திகள்

ஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு: ஜனாதிபதி ஜோ பைடன் + "||" + Biden Says US Combat Mission in Iraq to Conclude by Year End

ஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு: ஜனாதிபதி ஜோ பைடன்

ஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு: ஜனாதிபதி ஜோ பைடன்
ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிடுவதற்காக அமெரிக்கா கடந்த 2014-ம் ஆண்டு ஈராக் நாட்டுக்கு தனது படைகளை அனுப்பியது. அமெரிக்க படைகளின் உதவியுடன் ஈராக் ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு‌ ஈராக் அறிவித்தது.
இருப்பினும் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் இன்னமும் தொடரும் நிலையில் அவர்களை எதிர்த்து சண்டையிட அமெரிக்க படைகள் ஈராக்கில் தொடர்ந்து முகாமிட்டுள்ளன.இதற்கிடையில் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் அமெரிக்கா தனது படைகளை திரும்ப பெற வேண்டும் என ஈராக் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்த நிலையில் அமெரிக்கா சென்றுள்ள ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார்.

அப்போது ஈராக்கில் அமெரிக்க போர் நடவடிக்கையை முறையாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள், அதாவது டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் முழுவதுமாக திரும்ப பெறப்படும் என ஜோ பைடன் அறிவித்தார்.‌ அதேசமயம் டிசம்பருக்கு முன்பாக ஈராக்கில் அமெரிக்க படைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுமா என்பதை ஜோ பைடன் தெரிவிக்கவில்லை. ஈராக்கில் தற்போது 2,500 அமெரிக்க வீரர்கள் உள்ளனர் 
என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘ஒலிம்பிக்கில் தலையிடக்கூடாது’ - அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை!
சீனாவில் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி வரும் 4-ந் தேதி தொடங்குகிறது.
2. ஈராக்கில் பயங்கரம்: ராணுவ முகாம் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்கியதில் 11 வீரர்கள் பலி
ஈராக்கில் ராணுவ முகாம் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 11 வீரர்கள் பலியாகினர்.
3. அமெரிக்காவின் புதிய தடையால் வடகொரியா கோபம்: கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை
வட கொரியா அண்மையில் மேற்கொண்ட ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலடியாக, அந்த நாட்டின் 5 அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
4. ஈராக்: அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
5. 2021ம் ஆண்டின் விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலை வகித்த சீனா!
கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 55 விண்களங்களை விண்ணில் ஏவியுள்ளது