உலக செய்திகள்

எப்-35 போர் விமானங்கள், ராணுவ தடவாளங்கள் விற்பனை; அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறது: அமெரிக்க துணைத்தூதர் + "||" + Sale of F-35 fighter jets, military equipment: US wants to end: US ambassador

எப்-35 போர் விமானங்கள், ராணுவ தடவாளங்கள் விற்பனை; அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறது: அமெரிக்க துணைத்தூதர்

எப்-35 போர் விமானங்கள், ராணுவ தடவாளங்கள் விற்பனை; அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறது: அமெரிக்க துணைத்தூதர்
பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட எப்-35 போர் விமானங்கள், ராணுவ தடவாளங்கள் விற்பனை விவகாரத்தை அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக துபாயில் அமெரிக்க துணைத்தூதர் பிலிப் பிரைன் தெரிவித்தார்.
போர் விமானங்கள் விற்பனை
அமீரகம், அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறைகளுக்கு இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. முதலாவதாக வளைகுடா போருக்கு பிறகு அமெரிக்கா எப்- 16 போர் விமானங்கள், ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்தது.இதில் கடந்த 2020-ம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் முதல் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் எப்-35 போர் விமானங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்வது குறித்து இரு நாடுகளுக்கு இடையே அதே ஆண்டின் நவம்பர் மாதத்தில் இறுதி வடிவம் பெற்றது. குறிப்பாக அமீரகம்-இஸ்‌ரேல் நாடுகளுக்கு இடையே உருவான சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு போர் விமானங்கள் விற்பனை குறித்த முயற்சி முன்னேற்றம் கண்டது.

மசோதா நிறைவேற்றம்
அதனை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க செனட் சபை கூட்டத்தில் பாப் மெனண்டெஸ் என்ற ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர் இருநாடுகளுக்கு இடையிலான ஆயுத சப்ளை குறித்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா மொத்தம் 49-க்கு 47 வாக்குகள் பெற்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து அமீரக ராணுவத்திற்கு நவீன எப்-35 லைட்னிங் 2 என்ற 50 போர் விமானங்கள் வாங்கப்படுவது உறுதியானது. இந்த போர் விமானங்களுடன் 18 ரேப்டார் டிரோன் எனப்படும் புதிய ரக ஆளில்லா குட்டி விமானங்கள், நவீன ஆயுதங்கள் 
மற்றும் ராணுவ தொழில்நுட்ப கருவிகளும் அமீரகத்திற்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதற்காக இருநாடுகளும் ஆயுத சப்ளைக்காக 2 ஆயிரத்து 300 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிற்கு (8,459 கோடி திர்ஹாம்) ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது கிடப்பில் போடப்பட்ட இந்த ராணுவ தளவாட விற்பனை விவகாரம் குறித்து துபாய் அமெரிக்க துணைத்தூதரகத்தில் துணைத்தூதர் பிலிப் பிரைன் தான் ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது:-

முடிவுக்கு வருகிறது
அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் பதவியில் இருந்தபோது இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன் பிறகு ஆட்சி மாற்றம் நடைபெற்று ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டதும் ராணுவ விற்பனை விவகாரங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என கடந்த ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வாஷிங்டனுக்கும், அபுதாபிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மேம்பட்ட தொழில்நுட்ப தளவாடங்கள் மற்றும் போர் விமானங்களை ஒப்படைக்கும் நேரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போது பைடன் தலைமையிலான அரசு எப் 35 
விற்பனையை விரும்புவதாக தெரிவித்துள்ளது.அதேபோல் அமீரகத்துடனான விற்பனையை முடிவுக்கு கொண்டு வரவும் அவர்கள் விரும்புகிறார்கள். இது குறித்து இன்னும் சில விவரங்கள் குறித்து அமெரிக்க தரப்பில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. எப்படி இருந்தாலும் இந்த விற்பனை நல்ல முடிவுக்கு வரும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.