உலக செய்திகள்

அஜர்பைஜான்-அர்மீனியா ராணுவங்களுக்கு இடையே மீண்டும் மோதல்; 3 வீரர்கள் பலி + "||" + 3 Azerbaijani soldiers killed in renewed clashes with Armenia

அஜர்பைஜான்-அர்மீனியா ராணுவங்களுக்கு இடையே மீண்டும் மோதல்; 3 வீரர்கள் பலி

அஜர்பைஜான்-அர்மீனியா ராணுவங்களுக்கு இடையே மீண்டும் மோதல்; 3 வீரர்கள் பலி
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் அர்மீனியாவின் எல்லையில் உள்ள நாகோர்னோ - காராபாக் எனும் மலைப்பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பதில் இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக மோதல் நிலவுகிறது.
இந்த எல்லை பிரச்சினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆயுத மோதலாக உருவெடுத்தது. இருதரப்பு ராணுவத்துக்கும் இடையில் 6 வாரங்கள் இடைவிடாமல் தொடர்ந்த சண்டையில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். இது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியதை தொடர்ந்து ரஷியாவின் சமாதான முயற்சியின் பலனாக நவம்பர் மாதம் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. இந்தநிலையில் நேற்று அஜர்பைஜான்-அர்மீனியா எல்லையில் இரு நாடுகளின் ராணுவத்துக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் அர்மீனியா ராணுவ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். அதே போல் அஜர்பைஜான் தரப்பில் 2 வீரர்கள் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு இருதரப்பும் ஒன்றை ஒன்று பரஸ்பர குற்றம் சாட்டியுள்ளன.‌ இதற்கிடையில் இந்த மோதலை தொடர்ந்து ரஷியா இரு தரப்பையும் தொடர்பு கொண்டு சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தியது. 

அதன்படி ரஷியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க அஜர்பைஜான் ராணுவம் அர்மீனியாவுடன் சண்டை நிறுத்தத்தை அறிவித்தது.

தொடர்புடைய செய்திகள்

1. எடப்பாடி பழனிசாமி வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் கோஷ்டி மோதல் ராஜேந்திரபாலாஜி உள்பட 15 பேர் மீது வழக்கு
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2. சரிவில் இருந்து மீளுமா ஐதராபாத் அணி? டெல்லி கேப்பிட்டல்சுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சரிவில் இருந்து மீளும் முனைப்புடன் உள்ள ஐதராபாத் அணி, பலம் வாய்ந்த டெல்லி கேப்பிட்டல்சுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.
3. சாலையை மறித்து காரை நிறுத்தியதை கண்டித்ததால் ஆத்திரம் இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல்
சென்னையை அடுத்த பனையூரில் சாலையை மறித்து காரை நிறுத்தியதை கண்டித்ததால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் மோட்டார்சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டது. 2 கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
4. டெல்லி திகார் சிறையில் கைதிகள் மோதல்
டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
5. கோடநாடு விவகாரம்: மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் நேரடி மோதல்
கோடநாடு விவகாரத்தில், சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரடி மோதலில் ஈடுபட்டனர்.