அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை


அலாஸ்காவில் சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 July 2021 7:27 AM GMT (Updated: 29 July 2021 7:27 AM GMT)

வட அமெரிக்காவின் அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்:

வட அமெரிக்காவின் அலாஸ்கா  தீபகற்பத்தில் நேற்று 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெர்ரிவில் நகரின் தென்கிழக்கில் 56 மைல் (91 கிலோமீட்டர்) தொலைவில்  நிலநடுக்கம் ஏற்பட்டது, தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கன் தீபகற்பத்தில் சுனாமி எச்சரிக்கை விட்டப்பட்டு உள்ளது .அமெரிக்க அரசு அலாஸ்காவின் தென்கிழக்கு பகுதிக்கு  சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது.

பெர்ரிவில் என்பது அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஏங்கரேஜிலிருந்து 500 மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய நகரமாகும்.

கடந்த அக்டோபரில் அலாஸ்காவின் தெற்கு கடற்கரையில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சுனாமி அலைகளை ஏற்படுத்தியது, ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Next Story