உலக செய்திகள்

இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு + "||" + Echoes of deregulation in the UK; Increasing corona exposure

இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு
இங்கிலாந்தில் நிபுணர்கள் எச்சரிக்கையை மீறி கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 19ந்தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து உத்தரவிட்டார்.

இதனால், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடையில்லை.  முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது ஆகியவற்றில் விலக்கு அளிக்கப்பட்டன.  இதனால் மக்கள் இயல்பு நிலையை நோக்கி திரும்பினர்.

இதேபோன்று, இரவு நேர மதுபான விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் முழுமையான கட்டுப்பாடுகளை தளர்த்துவது எதிர்காலத்தில் தொற்றை அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

அந்நாட்டில் 60% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று சற்று குறைந்து இருந்தது. இதனை தொடர்ந்து அங்கு முழுமையாக கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இந்த நிலையில் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 31,117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சம் கடந்துள்ளது.  11.83 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதேபோல் 85 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,29,515 ஆக உயர்ந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. உத்தர பிரதேசத்தில் 130 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட நபர்
உத்தர பிரதேசத்தில் 130 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பில் இருந்து நபர் ஒருவர் விடுபட்டு உள்ளார்.
3. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.
4. திருச்சியில் 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு
திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய முதல்நிலை காவலர் உட்பட 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா பாதிப்பு; டெல்லியில் 7-வது நாளாக உயிரிழப்பு இல்லை
டெல்லி மக்களுக்கு மேலும் ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கு தொடர்ந்து 7-வது நாளாக கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.