கொரோனா அச்சம்: இங்கிலாந்து உள்பட 4 நாடுகளுக்கான பயண தடையை நீட்டித்த இஸ்ரேல்


கொரோனா அச்சம்:  இங்கிலாந்து உள்பட 4 நாடுகளுக்கான பயண தடையை நீட்டித்த இஸ்ரேல்
x
தினத்தந்தி 31 July 2021 3:33 AM GMT (Updated: 2021-07-31T09:03:25+05:30)

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு, இந்தியா உள்ளிட்ட பயண தடை பட்டியலில் இங்கிலாந்து உள்பட 4 நாடுகளை இஸ்ரேல் சேர்த்து உள்ளது.



ஜெருசலேம்,

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு தனது நாட்டு குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் இந்தியா, அர்ஜென்டினா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, மெக்சிகோ, ரஷ்யா, பெலாரஸ், உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதித்து உள்ளது.

எனினும் விதிவிலக்கு குழுவின் சிறப்பு அனுமதி பெற்று பயணம் மேற்கொள்ளலாம்.  இந்த நாடுகள் தவிர்த்து, பிற 18 நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு கடுமையான எச்சரிக்கையையும் இஸ்ரேல் விடுத்துள்ளது.  இந்த நிலையில், இங்கிலாந்து, ஜார்ஜியா, சைப்ரஸ் மற்றும் துருக்கி ஆகிய 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இஸ்ரேல் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.


Next Story