அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் கொரோனாவால் மோசமாக பாதிப்பு


அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் கொரோனாவால் மோசமாக பாதிப்பு
x
தினத்தந்தி 1 Aug 2021 2:13 AM GMT (Updated: 1 Aug 2021 2:13 AM GMT)

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுக்கிறது. புளோரிடா மாகாணம், மோசமான பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

நாடு முழுவதும் பாதிப்புக்கு ஆளாகிற 5 பேரில் ஒருவர், புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர். கடந்த ஒரு வாரத்தில் இந்த மாகாணத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய வாரம், இது 73 ஆயிரமாக இருந்தது. ஜூன் 11-ந் தேதியுடன் முடிந்த வாரத்தில் இது 10 ஆயிரமாக பதிவாகி இருந்தது. தடுப்பூசி போடுதவற்கு முன்பாக கடந்த ஜனவரி 
மாதம் நிலவிய நிலை, இப்போது புளோரிடா மாகாணத்தில் நிலவுகிறது என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த மாகாணத்தில் ஒரு வாரத்தில் 409 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 

இதனால் அந்த மாகாணத்தில் கடந்த ஆண்டு மார்ச் முதல் இதுவரையில் 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.கடுமையான வெப்பத்தால் எல்லோரும் வீடுகளுக்குள் அடைந்து கிடந்து கொண்டு, குளுகுளு வசதியுடன் இருப்பதால்தான் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதாக மாகாண கவர்னர் ரான் டிசாண்டிஸ் தெரிவித்தார்.

Next Story