உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.89 கோடியாக உயர்வு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 Aug 2021 1:27 AM GMT (Updated: 2 Aug 2021 1:27 AM GMT)

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.95 கோடியை தாண்டியது.

ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.89 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 19,89,75,120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,95,95,844 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42 லட்சத்து 39 ஆயிரத்து 777 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,51,39,499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 90,254 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு-  3,57,68,924, உயிரிழப்பு -  6,29,380, குணமடைந்தோர் - 2,96,73,290
இந்தியா   -   பாதிப்பு - 3,16,95,368, உயிரிழப்பு -  4,24,808, குணமடைந்தோர் - 3,08,49,681
பிரேசில்   -   பாதிப்பு - 1,99,38,358, உயிரிழப்பு -  5,56,886, குணமடைந்தோர் - 1,86,45,993
ரஷ்யா    -   பாதிப்பு -  62,88,677, உயிரிழப்பு -  1,59,352, குணமடைந்தோர் -   56,25,890
பிரான்ஸ்    - பாதிப்பு -  61,46,619, உயிரிழப்பு -  1,11,885, குணமடைந்தோர் -   57,02,032

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

இங்கிலாந்து  - 58,80,667
துருக்கி      - 57,47,935
அர்ஜெண்டினா- 49,35,847
கொலம்பியா -  47,94,414
ஸ்பெயின்    - 44,47,044
இத்தாலி     - 43,55,348
ஈரான்        - 39,03,519
ஜெர்மனி     - 37,78,276
இந்தோனேசியா- 34,40,396
போலந்து     - 28,83,029

Next Story