அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; புளோரிடாவில் ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு தொற்று


அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; புளோரிடாவில் ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 2 Aug 2021 2:48 AM GMT (Updated: 2 Aug 2021 2:48 AM GMT)

அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. புளோரிடா மாகாணத்தில் ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகி உள்ளது.

பாதிப்பு அதிகரிப்பு
அமெரிக்காவில் கொரோனாவின் முதல் அலை, உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. பைசர், மாடர்னா போன்ற தடுப்பூசிகள் வந்த பின்னர் அவற்றை போட்டுக்கொள்வதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். அதன் பின்னர் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்தது.ஆனால் தற்போது அங்கு தொற்று பாதிப்பு மறுபடியும் அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் கடுமையாக பாதிக்கப்படுவதால் மக்களிடம் தற்போது தடுப்பூசி மீது மீண்டும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் சராசரியாக தினமும் 3 லட்சத்து 90 ஆயிரம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

ெடல்டா ைவரஸ்
இந்தியாவில் முதன்முதலாக காணப்பட்ட டெல்டா வைரஸ்தான் தற்போது அமெரிக்காவுக்கு சவாலாக உருவாகி உள்ளது. இதனால்தான் தொற்று பாதிப்பு ஏறு முகம் கண்டு வருகிறது.இதுகுறித்து கெய்சர் பேமிலி பவுண்டேசன் மூத்த துணைத்தலைவர் ஜென் கேட்ஸ் கூறும்போது, “கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. தடுப்பூசிபோட்டுக் கொள்ளாதவர்கள்தான் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுகிறார்கள். அவர்கள்தான் இறக்கவும் செய்கிறார்கள்” என குறிப்பிட்டார்.

புளோரிடாவில் மோசமான பாதிப்பு
அமெரிக்காவில் புளோரிடா மாகாணம்தான் தற்போது மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது. அங்கு நேற்று முன்தினம் 21 ஆயிரத்து 683 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதான் அங்கு கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய பிறகு, அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.அதிகபட்சமாக கடந்த ஜனவரி 7-ந் தேதி அங்கு 19 ஆயிரத்து 334 பேர் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர். கடந்த ஒரு வாரத்தில் அங்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.

நிபுணர்கள் எச்சரிக்ைக
வேகமாக தொற்றுகிற டெல்டா வைரஸ் பரவத்தொடங்கி இருப்பதால் இந்த மாதம் அங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் ஒரு நாளில் 70 ஆயிரம் பேர் என்ற அளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 6 வாரங்களுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகிறபோது இது 60 ஆயிரம் அதிகம் ஆகும்.அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் நேற்று மாலை நிலவரப்படி, அங்கு இதுவரையில் 3 கோடியே 49 லட்சத்து 78 ஆயிரத்து 461 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்து 13 ஆயிரத்து 157 பேர் இறந்தும் உள்ளனர். மீண்டும் தொற்று பரவல் அதிகரிப்பது அமெரிக்க மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

Next Story