துருக்கி காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழப்பு; 864 பேர் காயம்


துருக்கி காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழப்பு; 864 பேர் காயம்
x
தினத்தந்தி 2 Aug 2021 4:07 AM GMT (Updated: 2 Aug 2021 4:07 AM GMT)

துருக்கியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 864 பேர் காயமடைந்து உள்ளனர்.



அங்காரா,

துருக்கியில் மத்திய தரைக்கடல் மற்றும் ஏஜியன் பகுதிகளில் கடந்த வாரம் காட்டுத்தீ ஏற்பட்டது.  இதனால், பலர் தீயில் சிக்கியுள்ளனர்.  இதுபற்றி அந்நாட்டின் விவசாய மற்றும் வனத்துறை மந்திரி பெகிர் பக்டிமிர்லி கூறும்போது, மனவ்காட் பகுதியில் 7 பேர், மர்மரிஸ் பகுதியில் ஒருவர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்து உள்ளனர் என கூறியுள்ளார்.

இதேபோன்று, மனவ்காட் பகுதியில் 507 பேர், மர்மரிஸ் மற்றும் போட்ரம் பகுதியில் 203 பேர் மற்றும் மெர்சின் பகுதியில் 154 பேர் என மொத்தம் 864 பேர் காயமடைந்து உள்ளனர்.

இவர்களில் மனவ்காட் பகுதியை சேர்ந்த 497 பேர், மர்மரிஸ் மற்றும் போட்ரம் பகுதியை சேர்ந்த 186 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  மெர்சின் பகுதியை சேர்ந்த 154 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.




Next Story