60 நாடுகளுக்கு, 11 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது: அமெரிக்கா தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 Aug 2021 9:50 PM GMT (Updated: 3 Aug 2021 9:50 PM GMT)

11 கோடி கொரோனா தடுப்பூசிகளை, 60 நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வாஷிங்டன், 

டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் ரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 கோடியை நெருங்கி உள்ளது. 

இதனிடையே கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும் வகையில் தங்களிடம் உபரியாக உள்ள கொரோனா தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக அமெரிக்கா கடந்த மே மாதம் அறிவித்தது.

அந்த வகையில் இதுவரை 60 நாடுகளுக்கு 11 கோடி கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி உள்ளதாக அமெரிக்கா தற்போது தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாதத்தின் இறுதியில் குறைவான வருவாய் கொண்ட 100 நாடுகளுக்கு தலா 5 லட்சம் பைசர் கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் பணி தொடங்கப்படும் என்றும் வெள்ளை மாளிகையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story