பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முதல்-மந்திரியாக அப்துல் காயிம் நியாசி தேர்வு


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முதல்-மந்திரியாக அப்துல் காயிம் நியாசி தேர்வு
x
தினத்தந்தி 5 Aug 2021 2:45 AM GMT (Updated: 5 Aug 2021 2:45 AM GMT)

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முதல்-மந்திரியாக அப்துல் காயிம் நியாசி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு அண்மையில் தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

இதன் மூலம் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முதல்முறையாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சி அமைக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, காஷ்மீரின் ஒருங்கிணைந்த பகுதியான கூறிவரும் இந்தியா அங்கு நடந்த இந்த தேர்தலை நிராகரித்துள்ளது. இது பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை மூடி மறைக்கும் ஒரு முயற்சி என சாடியது.

இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முதல்-மந்திரியாக அப்துல் காயிம் நியாசி என்பவரை பிரதமர் இம்ரான் கான் தேர்வு செய்துள்ளார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைக்கு பிறகு அப்துல் காயிம் நியாசியை இம்ரான் கான் தேர்வு செய்ததாக பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தெரிவித்துள்ளது. அப்துல் காயிம் நியாசியின் தலைமையில் புதிய அரசு விரைவில் பதவியேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story