பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதற்கு பதிலடி; ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்


பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதற்கு பதிலடி; ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்
x
தினத்தந்தி 7 Aug 2021 11:29 PM GMT (Updated: 7 Aug 2021 11:29 PM GMT)

பலூன்கள் மூலம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதற்குப் பதிலடியாக, காசா முனையில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் கடந்த மே மாதம் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாலஸ்தீனியர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.

பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் விமானப்படை காசா முனை பகுதியில் தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பின் முக்கிய இடங்களை தகர்த்தது. 

இருதரப்புக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று காசா பகுதியிலிருந்து பலூன்கள் மூலம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதற்குப் பதிலடியாக, அந்தப் பகுதியிலுள்ள ஹமாஸ் அமைப்பின் நிலைகள் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ஹமாஸ் ராணுவ வளாகம் ஒன்றிலும் அவா்களது ஏவுகணை குண்டுவீச்சு தளத்திலும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தது. எனினும், இந்தத் தாக்குதலில் உயிா்ச் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. இதுகுறித்து ஹமாஸ் தரப்பிலிருந்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Next Story