உலக செய்திகள்

மேற்கு ஆப்பிரிக்காவில் புதிய கொடிய வைரஸ்; உலக சுகாதார அமைப்பு பகீர் தகவல் + "||" + 1st West African Case Of Deadly Marburg Virus Detected: WHO

மேற்கு ஆப்பிரிக்காவில் புதிய கொடிய வைரஸ்; உலக சுகாதார அமைப்பு பகீர் தகவல்

மேற்கு ஆப்பிரிக்காவில் புதிய கொடிய வைரஸ்; உலக சுகாதார அமைப்பு பகீர் தகவல்
வெளவால்களிலிருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவா,

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எபோலா, கோவிட் - 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.

வெளவால்களிலிருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி, தெற்கு குக்கெடோ மாகாணத்தில் மார்பர்க் வைரஸ் நோய் காரணமாக இறந்த நோயாளியின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தியதில்  இந்த கொடிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக உலக சுகாதார் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

கினியாவில் எபோலா நோய் முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து 2 மாதங்களே ஆகியுள்ள நிலையில், புதிய மார்பர்க் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்- உலக சுகாதார அமைப்பு அடுத்தவாரம் இறுதி முடிவு
வசரகால பயன்பாட்டுக்கு கோவேக்சினை பயன்படுத்த அனுமதி கோரி பாரத் பயோடெக் உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.
2. காற்று மாசுபாடு தரத்தை புதுப்பித்துள்ளது உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பானது காற்று மாசு குறித்த வழிகாட்டுதல்களை 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுப்பித்துள்ளது. இந்த புதிய வரம்புகளை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று பரிந்துரைத்துள்ளது.
3. தென் கிழக்கு ஆசியாவில் கொரோனா பாதிப்பு சரிவு- உலக சுகாதார அமைப்பு அறிக்கை
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பான வாராந்திர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
4. கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்குமா? உலக சுகாதார அமைப்பு பரிசீலனை
பாரத் பயோடெக் நிறுவனம், உலக சுகாதார அமைப்பிடம் பல்வேறு தரவுகளுடன் விண்ணப்பித்துள்ளது.
5. டெல்டா வகை கொரோனா புதிய உச்சம்;உயிரிழப்பும் அதிகரிப்பு-உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
டெல்டா வகை கொரோனா புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. உயிரிழப்பும் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.