அல்ஜீரியாவில் காட்டுத்தீயின் பயங்கரம்: 25 ராணுவ வீரர்கள் உள்பட 42 பேர் பலி


அல்ஜீரியாவில் காட்டுத்தீயின் பயங்கரம்: 25 ராணுவ வீரர்கள் உள்பட 42 பேர் பலி
x
தினத்தந்தி 10 Aug 2021 9:08 PM GMT (Updated: 10 Aug 2021 9:08 PM GMT)

அல்ஜீரியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 25 ராணுவ வீரர்கள் உள்பட 42 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அல்ஜீரியஸ், 

அல்ஜீரியாவில் காட்டுத்தீ வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள காட்டுப் பகுதியில் புகை மூட்டம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் குடியிருப்பாளர்கள் மரக் கிளைகளைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் வாளிகளில் தண்ணீரை வீசி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீயில் சிக்கி பல வீடுகள் எரிக்கப்பட்டன. 

இந்த தீவிபத்துக்குப் பின்னால் இருப்பவர்களை அடையாளம் காணுவதற்கான விசாரணை தொடங்கப்படும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் கமல் பெல்ட்ஜவுட் கூறி இருந்தார். 

இந்நிலையில் அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியர்ஸின் கிழக்கில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட காட்டுத்தீயை எதிர்த்துப் போராடிய 25 அல்ஜீரிய ராணுவ வீரர்கள் உள்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்ஜியர்ஸுக்கு கிழக்கே 100 கிமீ (62 மைல்) தொலைவில் உள்ள டிஸி ஓசோ மாகாணத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அரசாங்கம் முன்பு தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக நேற்று இரவு அரசு தொலைக்காட்சியில் பேசிய அந்நாட்டு பிரதமர் அய்மான் பெனாப்டெர்ரஹ்மானே, இராணுவத்தின் 25 வீரர்கள் உட்பட பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. விமானங்களை வாடகைக்கு எடுப்பதற்கும், தீயை அணைக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு,வெளிநாட்டுகளுடன் அரசாங்கம் மேம்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவம் இன்னும் தீயை அணைக்க முயன்று வருகின்றன. அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
 

Next Story