உலக செய்திகள்

ரஷியாவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து மூழ்கியது; 8 பேர் பலி + "||" + Eight feared dead after helicopter crashes into lake in Russia

ரஷியாவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து மூழ்கியது; 8 பேர் பலி

ரஷியாவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து மூழ்கியது; 8 பேர் பலி
ரஷிய நாட்டில் கம்சாத்கா தீபகற்பத்தில் உள்ள குரில் ஏரியில் நேற்று ஒரு சுற்றுலா ஹெலிகாப்டர் விழுந்து மூழ்கியது. இந்த ஹெலிகாப்டரில் 16 சுற்றுலா பயணிகளும், சிப்பந்திகளும் பயணித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 60 மீட்பு படை வீரர்களும், நீர்மூழ்கி வீரர்களும் அங்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வித்யாஜ் ஏரோ நிறுவனத்துக்குரிய இந்த எம்.ஐ.-8 ரக ஹெலிகாப்டர், ஏரியின் 420 அடி ஆழத்துக்கு சென்று விட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் 8 பேர் பலியாகி உள்ளதாக அஞ்சப்படுகிறது. 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பெட்ரோபாவ்லவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகர் அருகே உள்ள எரிமலை பகுதிக்கு சென்றபோதுதான் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருக்கிறது. தொடர்ந்து மீட்பு பணி நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த ரெயில்வே ஊழியர் பலி
திருவொற்றியூரில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த ரெயில்வே ஊழியர் பலியானார்.
2. ரஷ்யாவில் விமான விபத்து; 16 பேர் பலி
ரஷ்யாவில் பாராசூட் சாகச வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது.
3. மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வாலிபர்கள் உடல் நசுங்கி பலி
துரைப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிளில் முந்தி செல்ல முயன்ற போது தடுமாறி கீழே விழுந்ததில், மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வாலிபர்கள் உடல் நசுங்கி பலியானார்கள்.
4. உத்தரபிரதேசத்தில் பஸ்-லாரி மோதல்; 12 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டம், பாபுரி கிராமத்தில் நேற்று ஒரு தனியார் பஸ், லாரியுடன் பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது.
5. மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி தெலுங்கானா வாலிபர் பலி
மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி தெலுங்கானா வாலிபர் பலியானார். மாயமான ஐ.டி.ஐ மாணவர் உடல் நேற்று கரை ஒதுங்கியது.