இருதரப்பு கனிம வளத்தை மேம்படுத்த இந்தியா-ஓமன் புரிந்துணர்வு ஒப்பந்தம்


இருதரப்பு கனிம வளத்தை மேம்படுத்த இந்தியா-ஓமன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 13 Aug 2021 12:12 AM GMT (Updated: 13 Aug 2021 12:12 AM GMT)

மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியா மற்றும் ஓமன் நாட்டின் இருதரப்பு கனிம வளத்தை மேம்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய எரிசக்தி மற்றும் கனிமவளத்துறை சார்பில் இந்திய தூதர் முனு முகவரும், ஓமன் நாட்டின் எரிசக்தி மற்றும் கனிமவளத்துறை சார்பில் அதன் செயலாளர் சலீம் அல் அவுபி கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இந்தியா-ஓமன் இடையே கனிம வளத்துறையை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக இருதரப்பு தகவல் பரிமாற்றம் மூலம் நவீன முறையில் கனிமவளத்தை பெறுவது, அது தொடர்பான தொழில்துறைகளை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் ஓமன் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story