தென் கிழக்கு ஆசியாவில் கொரோனா பாதிப்பு சரிவு- உலக சுகாதார அமைப்பு அறிக்கை


தென் கிழக்கு ஆசியாவில் கொரோனா பாதிப்பு சரிவு- உலக சுகாதார அமைப்பு அறிக்கை
x
தினத்தந்தி 13 Aug 2021 2:25 AM GMT (Updated: 13 Aug 2021 2:25 AM GMT)

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பான வாராந்திர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஜெனீவா, 

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பான வாராந்திர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

* தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் ஒரு வாரத்தில் 7 லட்சத்து 99 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் சரிவு ஆகும்.

* இலங்கையிலும், தாய்லாந்திலும் தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது.

* 7 வாரங்கள் ஏறுமுகம் கண்ட இறப்பு எண்ணிக்கை, முதன்முதலாக குறைந்துள்ளது.

* புதிய பாதிப்புகளில் இந்தியாவில் அதிகபட்சம் 2 லட்சத்து 78 ஆயிரத்து 631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பில் இந்தோனேசியா அதிக எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. அங்கு 11 ஆயிரத்து 373 பேர் புதிதாக இறந்துள்ளனர். இந்தியாவில் 3,511 பேர் பலியாகி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story