இந்தோனேசியாவில் ராணுவத்தில் சேர பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை நிறுத்தம்


இந்தோனேசியாவில் ராணுவத்தில் சேர பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை நிறுத்தம்
x
தினத்தந்தி 13 Aug 2021 2:55 AM GMT (Updated: 13 Aug 2021 2:55 AM GMT)

ராணுவத்தில் சேரும் பெண்களுக்கு இனி கன்னித்தன்மை சோதனை கிடையாது என இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

ஜகர்த்தா, 

இந்தோனேசியா நாட்டில் ராணுவத்தில் சேர விரும்பும் பெண்களுக்கு, அவர்களது கன்னித்தன்மையை உறுதி செய்யும் சோதனை நடத்துவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களின் சுகாதாரப்பாதுகாப்பு மருத்துவ வழிகாட்டுதல்களை 2014-ம் ஆண்டு வழங்கிய உலக சுகாதார அமைப்பு கன்னித்தன்மை சோதனைக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்று கூறியது.

இப்படி உலக சுகாதார அமைப்பு கூறி 7 ஆண்டுகள் ஆன நிலையில், ராணுவத்தில் சேர விரும்புகிற பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை நிறுத்தப்படுவதாக இந்தோனேசிய ராணுவ தளபதி ஆண்டிகா பெர்காசா அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “ராணுவத்தில் சேரும் பெண்களுக்கு இனி கன்னித்தன்மை சோதனை கிடையாது. விண்ணப்பதாரர்களின் உடல்பயிற்சி திறன் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும். 

மேலும் உயிருக்கு ஆபத்தான மருத்துவ பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருப்பதற்காக நிறக்குருட்டுத்தன்மை மற்றும் அவர்களின் முதுகெலும்பு மற்றும் இதயங்களின் நிலை ஆகியவற்றை மட்டுமே ராணுவம் கருத்தில் கொள்ளும்” என தெரிவித்தார். இந்தோனேசிய ராணுவத்தின் இந்த முடிவை மனித உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன.

ராணுவத்தில் சேரும் பெண்களுக்கு இனி கன்னித்தன்மை சோதனை கிடையாது என இந்தோனேசியா தெரிவித்துள்ளது. 


Next Story