இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38 லட்சத்தைக் கடந்தது


இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38 லட்சத்தைக் கடந்தது
x
தினத்தந்தி 13 Aug 2021 10:40 PM GMT (Updated: 13 Aug 2021 10:40 PM GMT)

இந்தோனேசியாவில் ஒரே நாளில் 30,788 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜகார்ட்டா,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா 14-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்தோனேசியா சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 30,788 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்மூலம் அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,432 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 1.15 லட்சத்தைத் தாண்டியது. கொரோனாவில் இருந்து 32.89 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் இந்தோனேசியாவில் தற்போது 4 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story