இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62 லட்சத்தைக் கடந்தது


இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62 லட்சத்தைக் கடந்தது
x
தினத்தந்தி 15 Aug 2021 12:35 AM GMT (Updated: 15 Aug 2021 12:35 AM GMT)

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,520 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அங்கு கொரோனாவின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதி முதல் அங்கு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர்.

இருப்பினும் அரசு இத்தகைய தளர்வுகளை அறிவித்திருப்பது, கொரோனா தொற்றை அதிகரிக்க வழிவகுக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த சூழலில் இங்கிலாந்தில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,520 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62 லட்சத்தைக் கடந்துள்ளது. இதேபோல், 93 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,30,894 ஆக உள்ளது. மேலும் 13.13 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story