ரஷ்யாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 66 லட்சத்தைக் கடந்தது


ரஷ்யாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 66 லட்சத்தைக் கடந்தது
x
தினத்தந்தி 16 Aug 2021 12:19 AM GMT (Updated: 16 Aug 2021 12:19 AM GMT)

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,624 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாஸ்கோ,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2-வது இடத்தில் இந்தியாவும், 3-வது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இந்த வரிசையில் ரஷ்யா தற்போது 4-வது இடத்தில் உள்ளது.
 
இதற்கிடையில் ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ரஷ்ய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 816 பேர் உயிரிழந்ததால், அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 1.70 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

அங்கு இதுவரை மொத்தம் 58.84 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5.46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story