அமெரிக்காவில் பயங்கர காட்டுத்தீ - பல இடங்களில் மின் தடை


அமெரிக்காவில் பயங்கர காட்டுத்தீ - பல இடங்களில் மின் தடை
x
தினத்தந்தி 18 Aug 2021 8:43 PM GMT (Updated: 18 Aug 2021 8:43 PM GMT)

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது.

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. நிரா நவாடா மலைப்பகுதியில் இந்த காட்டுத்தீ பரவி வருகிறது.

இந்த காட்டுத்தீயால் இதுவரை 50 வீடுகள் எரிந்துள்ளனர். மேலும், காட்டுத்தீயில் சிக்கிய இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், காட்டுத்தீயால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. வடக்கு கலிபோர்னியா பகுதியில் காட்டுத்தீ காரணமாக 51 ஆயிரம் வீடுகளுக்கு தற்காலிகமாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. காட்டுத்தீ தொடர்ந்து வேகமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story