உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டம்: தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி + "||" + Afghanistan-Taliban crisis: Two killed as Taliban open fire at crowd during Independence Day celebrations

ஆப்கானிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டம்: தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

ஆப்கானிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டம்: தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி
ஆப்கானிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் இருவர் பலியாகினர்.
காபூல், 

ஆங்கிலேயர்களிடம் இருந்து கடந்த 1919ஆம் ஆண்டு ஆகஸ்டு 19ஆம் தேதி ஆப்கானிஸ்தான் விடுதலை பெற்றது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அசாதாபாத் என்ற இடத்தில் அந்நாட்டின் 102வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், அங்குள்ள மக்கள் மூவர்ண தேசிய கொடியுடன் பேரணியாக சென்றுள்ளனர். அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

அப்போது ஆப்கானிஸ்தான் தேசிய கொடியை அசைத்த மக்களை குறிவைத்து தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மக்கள் அலறியடித்து ஓடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலர் சிக்கினர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் இருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

துப்பாக்கிச் சூட்டால் உயிரிழப்புகள் ஏற்பட்டதா அல்லது கூட்டநெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தலிபான்கள் தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
2. சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் கீழ் தலீபான்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் - அண்டோனியோ குட்டாரெஸ்
ஆப்கானிய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை தலீபான்கள் நிறைவேற்ற வேண்டும் என அண்டோனியோ குட்டாரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
3. பொது இடங்களில் பெண்கள் பர்தா கட்டாயம் அணிய வேண்டும்: தலீபான்கள் அறிவிப்பு
ஆப்கனில் வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் தங்களது உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் புர்கா அணிய வேண்டும் என தலீபான் அரசு தெரிவித்துள்ளது
4. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்குவது நிறுத்தம்
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
5. தலீபான்களுக்கு எதிராக புதிய போர் தொடங்கப்படும்..!! - முன்னாள் ராணுவ தளபதி சூளுரை
ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு எதிராக புதிய போர் தொடங்கப்படும் என்று முன்னாள் ராணுவ தளபதி சூளுரைத்துள்ளார்.