ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்க தடை: ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் முதல் கட்டளை


ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்க தடை: ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் முதல் கட்டளை
x
தினத்தந்தி 21 Aug 2021 11:07 PM GMT (Updated: 21 Aug 2021 11:07 PM GMT)

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலீபான்கள் தடாலடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

காபூல், 

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலீபான்கள் தடாலடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அங்கு ஹெராத் மாகாணத்தில், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆண்களும், பெண்களும் ஒன்றாக சேர்ந்து படிக்க தடை விதித்து முதல் கட்டளையை அவர்கள் பிறப்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்களின் அதிபர்கள், தலீபான் அதிகாரிகள் ஆகியோர் சந்தித்துப் பேசிய பிறகு இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஆண்களும், பெண்களும் ஒன்றாக சேர்ந்து படிப்பதுதான் சமூகத்தின் எல்லா தீமைகளுக்கும் வேராக இருக்கிறது என்று தலீபான்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆட்சியைக் கைப்பற்றியதும் முதல் கட்டமாக பத்திரிகையாளர்களை சந்தித்த தலீபான்கள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித், “இஸ்லாமிய சட்ட நெறிமுறைகளுக்குட்பட்டு பெண்களின் உரிமைகளை மதிப்போம்” என கூறியது நினைவுகூரத்தக்கது.

Next Story