ஆப்கானிய பயங்கரவாதிகள் ரஷியாவுக்குள் நுழைவதை நான் விரும்பவில்லை - விளாடிமிர் புதின்


ஆப்கானிய பயங்கரவாதிகள் ரஷியாவுக்குள் நுழைவதை நான் விரும்பவில்லை - விளாடிமிர் புதின்
x
தினத்தந்தி 23 Aug 2021 3:29 AM GMT (Updated: 23 Aug 2021 3:29 AM GMT)

அகதிகள் என்ற போர்வையில் ஆப்கானிய பயங்கரவாதிகள் ரஷியாவுக்குள் நுழைவதை நான் விரும்பவில்லை என்று ரஷிய அதிபர் விளாடிமிர் தெரிவித்தார்.

மாஸ்கோ,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். 

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்படும் மக்களை மத்திய ஆசிய நாடுகளில் எந்த வித விசா நடைமுறைகளையும் பின்பற்றாமல் அகதிகளாக தங்கவைக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. 

அதேவேளை ஆப்கானிய அகதிகளை தங்கள் நாட்டிற்குள் தங்கவைக்க விசா நடைமுறைகளை பின்பற்றும் திட்டத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தனது கட்சி தலைவர்களுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய புதின், ஆப்கானிய மக்களை எந்த வித விசா நடைமுறைகளும் இன்றி மத்திய ஆசிய நாடுகளில் மேற்கத்திய நாடுகள் தங்கவைக்க திட்டமிட்டுள்ளன. 

ஆனால், ஆப்கானிய அகதிகளை தங்கள் நாட்டிற்குள் விசா இன்றி தங்க வைக்க ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. அகதிகள் என்ற போர்வையில் ஆப்கானிய பயங்கரவாதிகள் ரஷியாவுக்குள் நுழைவதை நான் விரும்பவில்லை’ என்றார்.

Next Story