கொரோனா வைரசை கொல்லும் முககவசம் - மெக்சிகோவில் கண்டுபிடிப்பு


கொரோனா வைரசை கொல்லும் முககவசம் - மெக்சிகோவில் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 27 Aug 2021 11:26 PM GMT (Updated: 2021-08-28T04:56:30+05:30)

கொரோனா வைரசை கொல்லும் முககவசம் மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ சிட்டி, 

கொரோனா வைரஸ் தொற்று வராமல் பாதுகாக்க நம்மில் பலரும் முககவசம் அணிகிறோம். முககவசம் அணிந்தாலே கொரோனா தொற்று பரவலை பெருமளவில் தடுக்கலாம் என உலகளவில் ஆராய்ச்சி தகவல்கள் சொல்கின்றன. 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை ஏற்படுத்துகிற சார்ஸ் கோவ்-2 வைரசை கொல்கிற முககவசத்தை மெக்சிகோ சிட்டியில் உள்ள மெக்சிகோ தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது. இந்த முககவசம் துணியினால் உருவாக்கப்பட்டாலும் அதில் வெள்ளி மற்றும் தாமிர ‘நானோலேயர்’கள் இருக்கும். இவை 30-40 நானோமீட்டர் தடிமன் கொண்டதாக அமைந்திருக்கும். 

இந்த முககவசத்தை 10 முறை வரையில் துவைத்தும் பயன்படுத்த முடியும். தற்போது ஒரு நாளில் 200 முககவசங்களை தயாரிக்க முடிந்தாலும், இவற்றை பெருமளவில் தயாரிக்கிற திட்டம் இல்லையாம்.

Next Story