ஆப்கானிஸ்தான் விவகாரம்: சீனா - அமெரிக்கா இடையே ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை


ஆப்கானிஸ்தான் விவகாரம்: சீனா - அமெரிக்கா இடையே ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 28 Aug 2021 2:21 PM GMT (Updated: 28 Aug 2021 2:21 PM GMT)

சீனா, அமெரிக்க நாடுகளுக்கிடையே ராணுவ ரீதியான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

வாஷிங்டன், 

 சீனா, அமெரிக்க நாடுகளுக்கிடையே ராணுவ ரீதியான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்புபேற்றதையடுத்து நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழு துணை இயக்குநர் ஹுவாங் எக்ஸ்யுஇபிங், அமெரிக்கா ராணுவ துணை இயக்குநர் மைக்கேல் சேசுடன் கடந்த வாரம் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். 

 அலாஸ்கா பேச்சுவார்த்தையின் போது ( நடப்பு ஆண்டு துவக்கத்தில்)  சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இப்பிரச்னை குறித்து எழுப்பினார். ஆனால், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் இதுகுறித்து விவாதிக்க மறுத்துவிட்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story