தலீபான்களுடன் பேச்சுவார்த்தை - பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்


தலீபான்களுடன் பேச்சுவார்த்தை - பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்
x
தினத்தந்தி 28 Aug 2021 4:26 PM GMT (Updated: 28 Aug 2021 4:26 PM GMT)

தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

பாரிஸ், 

ஆப்கானிஸ்தானில் நடந்து வந்த 20 ஆண்டு கால உள்நாட்டு போர் கடந்த 15-ந் தேதி முடிவுக்கு வந்தது. அந்த நாடு, எந்நேரமும் கைகளில் துப்பாக்கிகளுடன் வலம் வருகிற தலீபான்கள் வசம் போய் விட்டது.

அந்த நாள் முதல் ஆப்கானிஸ்தான் மக்களும், வெளிநாட்டு மக்களும் உயிர் பிழைக்கும் ஆசையில் விமானங்கள் மூலம் நாட்டை விட்டு வெளியேற அணி, அணியாக தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை நோக்கி சென்றனர்.

வரும் 31-ந் தேதிக்குள் வெளிநாட்டு படைகள் அந்த நாட்டில் இருந்து வெளியேறி விடும் என்பதால், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் அதற்குள் தங்கள் நாட்டினரை மீட்டு, அழைத்துப்போவதில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில்,  தலீபான்களுடன் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். 


Next Story