உலக செய்திகள்

டெல்டா வைரசால் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கும் அபாயம் அதிகரிப்பு - இங்கிலாந்து ஆய்வு முடிவு + "||" + Increased risk of hospitalization by delta virus UK study results

டெல்டா வைரசால் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கும் அபாயம் அதிகரிப்பு - இங்கிலாந்து ஆய்வு முடிவு

டெல்டா வைரசால் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கும் அபாயம் அதிகரிப்பு - இங்கிலாந்து ஆய்வு முடிவு
டெல்டா வைரசால் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கும் அபாயம் அதிகமாக உள்ளது என இங்கிலாந்து ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்,

கொரோனாவின் உருமாறிய வைரசான டெல்டா வைரஸ், முதன்முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்டது. இப்போது அது உலகின் சுமார் 150 நாடுகளுக்கு பரவி விட்டது. இந்த வைரஸ்பற்றி இங்கிலாந்து பொது சுகாதாரத்துறையும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் கூட்டாக ஒரு ஆய்வு நடத்தி உள்ளன. இதன் முடிவுகள், தி லேன்செட் பத்திரிகையில் வெளியாகி உள்ளன.

இதன் முக்கிய அம்சங்கள்:-

* ஆல்பா வைரசுடன் ஒப்பிடும்போது, டெல்டா வைரசால் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் ஆபத்து அதிகமாக உள்ளது.

* டெல்டா வைரஸ் அதிகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளது.

* தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் டெல்டா வைரசால் பாதிக்கப்படுவது, சுகாதார பராமரிப்பு சேவைக்கு மிகப்பெரிய சுமையாக அமையும். இங்கிலாந்தில் 43 ஆயிரத்து 338 கொரோனா நோயாளிகளை கடந்த மார்ச்-மே மாதங்களில் ஆய்வு செய்து இந்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்டா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் குறைவான செயல்திறனையே கொண்டுள்ளன - புதிய ஆய்வுத்தகவல்
டெல்டா போன்ற புதிய வகை வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் குறைவான செயல்திறனையே கொண்டுள்ளன என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2. மராட்டியத்தில் மேலும் 27 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு
மராட்டிய மாநிலத்தில் டெல்டா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.
3. 18 மாகாணங்களில் டெல்டா வைரஸ் பரவலால் அலறுகிறது, சீனா
18 மாகாணங்களில் டெல்டா வைரஸ் பரவியதால் சீனா அலறுகிறது.
4. 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், டெல்டா வைரசில் இருந்து பாதுகாப்பு -விஞ்ஞானிகள் தகவல்
2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், டெல்டா வைரசில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.