உலக செய்திகள்

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; 30 வீரர்கள் உயிரிழப்பு + "||" + Insurgents attack in Yemen; 30 soldiers killed

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; 30 வீரர்கள் உயிரிழப்பு

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; 30 வீரர்கள் உயிரிழப்பு
ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 30 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.


சனா,

ஏமன் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடக்கிறது.  அந்நாட்டின் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை கட்டுப்படுத்த ராணுவ வீரர்களை அரசு பயன்படுத்துகிறது.

இந்த நிலையில், ஏமன் ராணுவ தளம் மீது ஏவுகணைகளை கொண்டு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இந்த சம்பவத்தில் 30 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் முகமது அல் நயீப் கூறும்போது, ஏமனில் லஜ் மாகாணத்தில் உள்ள அல் அனத் விமான படை தளத்தின் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானம் கொண்டு கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில் 30 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  65 பேர் காயம் அடைந்துள்ளனர்.

அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.   உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.  கடந்த 2014ம் ஆண்டில் இருந்து ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்

1. பெரு நாட்டில் சாலை விபத்து; 8 பேர் உயிரிழப்பு
பெரு நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.
2. டேங்கர் லாரி டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
டேங்கர் லாரி டிரைவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
3. தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்
சங்கரன்கோவில் அருகே பள்ளி தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டார்.
4. காஷ்மீரில் 16 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் சோதனை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 16 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
5. திருச்சியில் வேன் மீது லாரி மோதல்; 25 பேர் காயம்
திருச்சியில் வேன் மீது லாரி மோதியதில் 25 பேர் காயம் அடைந்து உள்ளனர்.