சவுதி அரேபிய விமான நிலையம் மீது டிரோன் தாக்குதல் - 8 பேர் காயம்


சவுதி அரேபிய விமான நிலையம் மீது டிரோன் தாக்குதல் - 8 பேர் காயம்
x
தினத்தந்தி 31 Aug 2021 9:32 AM GMT (Updated: 31 Aug 2021 9:32 AM GMT)

சவுதி அரேபிய விமான நிலையம் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர்.

ரியாத்,

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த உள்நாட்டு போர் காரணமாக ஏமனில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், சவுதி அரேபியாவின் ஆசிர் மாகாணத்தில் உள்ள அப்ஹா சர்வதேச விமான நிலையத்தில் இன்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. டிரான் மூலம் வெடிகுண்டு விமான நிலையம் மீது வீசப்பட்டது. 

இதை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஏவுகணை தடுப்பு அமைப்பு நடுவானில் தடுத்து நிறுத்தியது. ஆனால், சில குண்டுகள் விமான நிலையம் மீது விழுந்தன. இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். மேலும், பயணிகள் விமானம் ஒன்றும் சேதமடைந்தது. இந்த டிரோன் தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story