உலக செய்திகள்

இங்கிலாந்தில் புதிதாக 35,693 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 207 பேர் பலி + "||" + Corona affects 35,693 new people in the UK: another 207 killed

இங்கிலாந்தில் புதிதாக 35,693 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 207 பேர் பலி

இங்கிலாந்தில் புதிதாக 35,693 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 207 பேர் பலி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்,

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,693 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 68,25,074 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 207 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவாக பலி எண்ணிக்கை 200-ஐ தாண்டி பதிவாகி உள்ளது. இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 35,792 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 55 லட்சத்து 02 ஆயிரத்து 108 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 11,90,224 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியது
இங்கிலாந்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக ஒரேநாளில் 50,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2. இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 49,139 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்த இந்திய கணவருக்கு ஆயுள் தண்டனை
இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்து உடலை சாலையில் வீசிச்சென்ற இந்திய கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்தில் மேலும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 45,140 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 43,423 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,423 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.