உலக செய்திகள்

சீனாவில் சாலை விபத்தில் 15 பேர் பலி + "||" + 15 dead in heavy hauler-truck collision in northeast China

சீனாவில் சாலை விபத்தில் 15 பேர் பலி

சீனாவில் சாலை விபத்தில் 15 பேர் பலி
சீனாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹெய்லாங்ஜியங் மாகாணத்தில் உள்ள கிட்டோய்ஹோ நகரில் இன்று காலை அதிக பாரமுள்ள சரக்குகளை ஏற்றி செல்லும் கனரக வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
சாலையில் வேகமாக சென்ற போது திடீரென அந்த வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தறிகெட்டு ஓடிய அந்த வாகனம் எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த ஒரு லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

கனரக வாகனம் மோதியதில் அந்த லாரி முற்றிலுமாக உருக்குலைந்து போனது. இந்த கோர விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. குழந்தைகளின் தவறான நடத்தைக்கு பெற்றோருக்கு தண்டனை- சீனா திட்டம்
குழந்தைகளின் தவறான நடத்தை அல்லது குற்ற செயல்களுக்கு பெற்றோருக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வர சீன நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது.
2. சீனாவில் புதிதாக 20 பேருக்கு கொரோனா
சீனாவில் கடந்த ஒரிரு மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
3. துணை ஜனாதிபதியின் அருணாசல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு- இந்தியா நிராகரிப்பு
துணை ஜனாதிபதியின் அருணாசல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
4. சீனாவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சீனாவில் கடந்த ஒரிரு மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
5. சீனாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிதாக கொரோனா பாதிப்புகள் இல்லை
சீனாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று புதிதாக கொரோனா பாதிப்புகள் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.