ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் நடவடிக்கையை இந்தியாவும், அமெரிக்காவும் கண்காணித்து வருகின்றன - ஹர்ஷ் வர்தன் சிரிங்லா


ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் நடவடிக்கையை இந்தியாவும், அமெரிக்காவும் கண்காணித்து வருகின்றன - ஹர்ஷ் வர்தன் சிரிங்லா
x
தினத்தந்தி 4 Sep 2021 6:12 PM GMT (Updated: 4 Sep 2021 6:12 PM GMT)

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் என்ன செய்கிறது என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் கண்காணித்து வருவதாக ஹர்ஷ் வர்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் சிரிங்லா 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அன்டோனி பிளிங்கன் உள்ளிட்டோருடன் பேசிய பின்னர் ஹர்ஷ் வர்தன் சிரிங்லா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

“சமீபத்தில் கத்தார் நாட்டிற்கான இந்திய துாதர் தீபக் மிட்டல், தலிபான் அரசியல் தலைவர் ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானக்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ‘இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு எதிரான பயங்கரவாaத நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தானை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது’ என தீபக் மிட்டல் தெரிவித்தார். மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோரின் சம உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

அப்போது இந்தியாவின் கவலையில் உள்ள நியாயம் கவனத்தில் கொள்ளப்படும் என ஷெர் முகமது தெரிவித்தார். அதனால் ஆப்கானிஸ்தானில் தலீபான் என்ன செய்கிறது என்பதை விட, அங்கு பாகிஸ்தான் என்ன செய்கிறது என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் கூர்ந்து கண்காணித்து வருகின்றன. தலீபானும் பயங்கரவாதிகளுக்கு இடமளிக்க மாட்டோம் என, அமெரிக்காவுக்கு உறுதி அளித்து உள்ளது. அதன்படி தலீபான் அமைப்பினர் நடந்து கொள்கின்றனரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story