ஆப்கானிஸ்தானில் பஞ்ச்ஷிர் எதிர்ப்பால் தலீபான்கள் ஆட்சி அமைப்பதில் சிக்கல்!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 Sep 2021 7:43 AM GMT (Updated: 5 Sep 2021 7:43 AM GMT)

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் முடிவை இரண்டாவது முறையாக தலீபான்கள் ஒத்தி வைத்துள்ளனர்.

காபூல், 

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் முடிவை 2வது முறையாக தலிபான்கள் ஒத்தி வைத்துள்ளனர். ஆகஸ்ட் 15ம் தேதி ஆப்கானிஸ்தான் தலீபான் வசமான நிலையில் ஒப்பந்தத்தின்படி காபூல் விமானநிலையத்தில் இருந்த அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறின. 

அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை கொண்டாடிய தலீபான்கள், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டினர். தலீபான்களின் மூத்த தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் தலைமையில் தலீபான் ஆட்சி நடைபெறும் எனவும், சனிக்கிழமை புதிய நிர்வாகம் ஆட்சிப் பொறுப்பேற்கும் என்றும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே தங்களிடம் அடிப்பணிய பஞ்ச்ஷிர் மாகாணம் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதையும் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தலீபான்கள் இறங்கியுள்ளனர். இந்த சூழலில் ஆட்சி அமைக்கும் முடிவு அடுத்த வாரம் ஒத்தி வைக்கப்படுவதாக தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை நிறுவுதற்காக, பல்வேறு கட்சிகள், இனக்குழுவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் இந்த தாமதம் என்று கூறப்படுகிறது. 

சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ள கூடிய விரிவடைந்த கட்டமைப்பை உருவாக்க தலீபான்களின் குழு பஞ்ச்ஷிர் மாகாணத்தில் போராடி வருவதால் ஆட்சி அமைக்கும் முடிவு ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, புதிய நிர்வாகத்தில் முக்கிய பதவி மற்றும் பொறுப்புகளில் பெண்களின் பங்கு இருக்கக்கூடாது என்று தலீபான்கள் கருதுவதால், வீதிகளில் இறங்கிய ஆப்கானிஸ்தான் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Next Story