உலக செய்திகள்

தலீபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஆப்கானிஸ்தான் எதிர்ப்புக் குழு தலைவர் அறிவிப்பு + "||" + Panjshir resistance leader says ready for talks with Taliban

தலீபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஆப்கானிஸ்தான் எதிர்ப்புக் குழு தலைவர் அறிவிப்பு

தலீபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஆப்கானிஸ்தான் எதிர்ப்புக் குழு தலைவர் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானிலிருந்து சர்வதேச படைகள் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில் புதிய அரசை அமைப்பதில் தலீபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேற தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே தலீபான் பயங்கரவாதிகள் முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசம் ஆக்கினார்.கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் காபூலை அவர்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதைத்தொடர்ந்து 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்த தலீபான்கள் தங்களது தலைமையில் நாட்டில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர்.

தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து சர்வதேச படைகள் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில் புதிய அரசை அமைப்பதில் தலீபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேவேளையில் ஆப்கானிஸ்தானில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலீபான்கள் கைப்பற்றிய போதும் இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் அவர்களால் கைப்பற்ற முடியாத நிலை  உள்ளது. 

அந்த வகையில் தற்போதும் ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டுள்ள துணை அதிபர் அமருல்லா சாலே தலைமையில் பஞ்ச்ஷீர் போராளிகள் தலீபான்களுடன் சண்டையிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், தலீபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக எதிர்ப்புக்குழுவின் தலைவர் அகமது மசூத் தெரிவித்துள்ளார். முன்னதாக, பஞ்ச்ஷீர் மாகாணத்தின் தலைநகரை சுற்றியுள்ள மாவட்டங்களை கைப்பற்றிவிட்டதாகவும் மாகாண தலைநகரை நோக்கி முன்னேறி வருவதாக தலீபான்கள் அறிவித்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக எதிர்ப்புக்குழு தலைவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கான் சிறுமிகள் மேல்நிலை கல்வி கற்க விரைவில் அனுமதி- தலீபான்கள் உறுதி
ப்கானிஸ்தானில் உள்ள அனைத்து சிறுமிகளும் மேல்நிலை கல்வி கற்க தலீபான்கள் விரைவில் அனுமதி வழங்குவார்கள் என ஐ.நா.வின் மூத்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2. ஆப்கானிஸ்தானில் மரங்களை வெட்ட தடை: தலீபான்கள் அதிரடி உத்தரவு
ஆப்கானிஸ்தானில் மரங்களை வெட்ட தடை விதித்து தலீபான்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
3. ஆப்கானிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு
ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த ஜனநாயக அரசை அகற்றிவிட்டு புதிய இடைக்கால அரசை தலீபான்கள் அமைத்துள்ளனர்.
4. தலீபான்களுடன் பேச்சுவார்த்தை: ரஷியா அழைப்பை ஏற்ற இந்தியா
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலீபான்களும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
5. ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 கூட்டத்தில் முடிவு
ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 நாடுகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.